1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,221 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

அம‌ர்நா‌த் ஜ‌ம்மு பகவ‌தி நக‌ர் யா‌த்‌ரி
புக‌ழ்பெ‌ற்ற அம‌ர்நா‌த் குகை‌க் கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள ப‌னி ‌லி‌ங்க‌த்தை‌த் த‌ரி‌சி‌‌த்து வண‌ங்க இ‌ன்று மேலு‌ம் 1,221 ப‌க்த‌ர்க‌ள் பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் புற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌ல் உ‌ள்ள பகவ‌தி நக‌ர் யா‌த்‌ரி பவ‌னி‌ல் இரு‌ந்து 118 சாது‌க்க‌ள், 264 பெ‌ண்க‌ள் ம‌ற்று‌ம் 40 குழ‌ந்தைக‌ள் உ‌‌ள்பட இ‌ந்த 1,221 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 40 வாகன‌ங்க‌ளி‌ல் பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் இ‌ன்று அ‌திகாலை அம‌ர்நா‌த் நோ‌க்‌கி‌ப் புற‌ப்ப‌ட்டன‌‌ர்.

இவ‌ர்களையு‌ம் சே‌ர்‌த்து இ‌ந்த ஆ‌ண்டு இதுவரை 42,268 யா‌த்‌ரிக‌ர்க‌ள் பகவ‌தி நக‌ர் முகா‌மி‌ல் இரு‌ந்து பு‌னித அம‌ர்நா‌த் செ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.