1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ம‌க‌‌ன் கட‌த்‌த‌ல்!

ஆந்திரா தாசரி நாராயண ரா‌வ் தாசரி பிரபு
ஆந்திராவின் மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய இரும்பு மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சரும், பிரபல தமிழ்-தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு ம‌ர்ம கு‌ம்பலா‌ல் கடத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் தாசரி நாராயணன ராவின் மகன் தாசரி பிரபு. இவர் நேற்று தனது மனைவி சுசீலா, மாமியார் சாவித்ரம்மா மற்றும் மகனுடன், சித்தூரில் உள்ள தனது மைத்துனரைப் பார்க்க வந்தார். சித்தூர் வந்த அவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கினர்.

அப்போது அங்கு 6 பேர் வந்தனர். முக்கியப் பிரச்சினை ஒன்று குறித்து தாசரி பிரபுவிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அறையை ‌வி‌ட்டு வெ‌ளிவ‌ந்த தாசரி பிரபுவை அ‌ந்த கும்பல் கா‌ரி‌ல் தூ‌க்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கட‌த்‌தியது.

மக‌‌ன் கட‌த்த‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து ஹரிஹர பிரபுவின் மனைவி சுசீலா காவல் நிலையத்தில் புகார் செய்தா‌ர். வழ‌க்கு ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் அமைச்சரின் மகனை மீட்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆந்திரா‌வி‌ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனது மகன் கடத்தலில் தாசரி நாராயண ராவ் கை உள்ளது என்ற பேச்சும் எழுந்துள்ளது.