1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல் ஊடுருவ முய‌ன்ற பா‌கி‌ஸ்தா‌‌னிய‌ர் கைது!

ஜ‌ம்மு பா‌கி‌ஸ்தா‌ன் ம‌ங்ர‌ல் ஹச‌ன் ரா‌ஜா கு‌ஜ்ர‌ன்வாலா பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர்
ஜ‌ம்மு‌வி‌ல் எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டை‌த்தா‌ண்டி நமது எ‌ல்லை‌க்கு‌ள் ஊடுருவ முய‌ன்ற பா‌கி‌ஸ்தா‌ன் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்‌தவ‌ரை எ‌ல்லை பாதுகா‌ப்பு படை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

ஜ‌ம்மு மாவ‌ட்ட‌ம் ஆ‌ர்.எ‌‌ஸ். புரா, ம‌ங்ர‌ல் எ‌ல்லை‌‌யி‌ல் உ‌ள்ள சோதனை‌ச் சாவடி‌ அருகே பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர், எ‌ல்லை தா‌ண்டி அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்‌ற ஒருவரை ‌கைது செ‌ய்தன‌ர்.

இதையடு‌‌த்து நட‌ந்த ‌‌விசாரணை‌யி‌ல் அவ‌ர் பெய‌ர் ஹச‌ன் ரா‌ஜா எ‌ன்று‌ம் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல் உ‌ள்ள கு‌ஜ்ர‌ன்வாலா எ‌ன்னு‌மி‌ட‌த்‌தி‌ல்‌ இரு‌ந்து வ‌‌ந்தது‌ம் தெ‌ரிய வ‌‌‌ந்தது. ‌பி‌ன்ன‌ர், ஹச‌ன் ராஜா மே‌ல் ‌விசாரணை‌‌க்காக காவ‌ல் துறை வச‌ம் ஒ‌ப்படை‌‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.