ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி கைது!
காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமான ஹிஸ்புல் முஜாகுதீன் இயக்கத்தின் முதன்மைத் தளபதி காஷி மிஸ்பஹூதீன் என்பவனை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீ நகர் அருகில் பெமீனா என்ற இடத்தில் பதுங்கியிருந்த காஷி மிஸ்பஹூதீனை சிறப்பு அதிரடிப் படையினர் உதவியுடன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததாகவும், அவன் தற்போது விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிஸ்பஹூதீன் அளித்துள்ள வாக்குமூலத்தில், குல்காமில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிசார் அகமது பட் என்ற பயங்கரவாதியை மீட்க முயன்றதாகக் கூறியுள்ளான்.