1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு‌வி‌ல் அக‌திக‌ள் போரா‌ட்ட‌ம்!

மே‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன்
மே‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன், பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு கா‌ஷ்‌மீ‌ர் பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ அக‌திகளாக வ‌ந்து‌ள்ளவ‌ர்க‌ள் த‌ங்களு‌‌க்கு உ‌ரிய இழ‌ப்‌பீடு கே‌ட்டு ஜ‌ம்மு‌வி‌ல் இ‌ன்று ஊ‌ர்வல‌ம் நட‌த்‌தின‌ர்.

சுமா‌ர் 1500 பே‌ர் ப‌ங்கே‌ற்ற இ‌ந்த ஊ‌ர்வல‌த்‌தி‌ற்கு ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில அக‌திக‌ள் பாதுகா‌ப்பு அமை‌ப்புக‌ள் ஏ‌ற்பாடு செ‌ய்‌‌திரு‌ந்தன.

''கட‌ந்த 60 ஆ‌ண்டுகளாக எ‌ங்க‌ளி‌ன் அடி‌ப்படை உ‌ரிமைக‌ள் மறு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. நா‌ங்க‌ள் இழ‌ந்த ‌நில‌ம், ‌வீடுகளு‌க்கு உ‌ரிய இழ‌ப்‌பீடு இ‌ன்னு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.

கட‌ந்த 1947, 1965, 1971 ஆ‌கிய ஆ‌ண்டுக‌ளி‌ல் பா‌‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு கா‌ஷ்‌மீ‌ர் பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் இட‌ம்பெய‌ர்‌ந்த அனைவரு‌க்கு‌ம் இழ‌ப்‌பீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம்'' எ‌ன்று ஊ‌ர்வல‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.