குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் நடவடிக்கையின் ஒரு அங்கமாவதனால், குடியரசுத் தலைவர் மாளிகையின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவே மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தான் மறுத்துவிட்டதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்!குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் இதழியலாளர்களுடன் பேசிய கலாம், கடந்த 5 ஆண்டு காலத்தில் ராஷ்ட்ரபதி பவனை மக்கள் பவனாக மாற்றியுள்ளோம். இன்று அது மக்கள் பவனாகக் காட்சி அளிக்கிறது. தேசத்திற்கு அது...