பாகிஸ்தான் இராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலியாயினர். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் `நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் முகமது மலைப்பகுதியில் நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்தன. பின்னர் இராணுவ சோதனை சாவடியின்மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்...