1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பகிரங்கமாக வெளியீடு

srilanka war crime: UN panel report released | இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பகிரங்கமாக வெளியீடு

இலங்கை போர்க் குற்றம்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

214 பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தக் குற்றங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை முழுமையாக விசாரணைகளை நடத்தியிருப்பதாகவும், இதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியது, மனிதாபிமான உதவிகளை மறுத்தது, இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியது,போர் வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது பொதுமக்கள் இழப்பு ஏற்படவில்லை என இலங்கை அரசாங்கம் கூறுகின்ற போதிலும்,உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக ஐந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் மேற்கொள்ள முடியாது என்றும், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது உலக நாடுகள்,பொதுமக்கள் உயிர் இழப்புக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கமும், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
Webdunia