1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. லிபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை; தூதரகமும் மூடல்

US slaps sanctions on Libya; closes embassy at Tripoli | லிபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை; தூதரகமும் மூடல்

லிபியா
கலவரம் தொடர்ந்து நீடிப்பதால் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதோடு, அந்நாட்டிலுள்ள தனது தூதரகத்தையும் மூடியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை நசுக்க அந்நாட்டு படையினர் மேற்கொண்டு நடவடிக்கைகளினால் வீதியெங்கும் பிணக்குவியல்கள் காணப்படுகின்றன.

படையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் பலப்பிரயோகத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.

இதனிடையே அதிபர் கடாபி தாம் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, போராட்டக்காரர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கடாபியின் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, அங்கு நடை பெற்று வரும் கடாபியின் அரசுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

வாஷிங்டனில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜெய் கார்னி, லிபியாவுக்கு எதிரான மேலும் பல நடவடிக்கைகள் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் லிபியாவில் உள்ள தனது தூதரகத்தையும் மூடியுள்ளது.
About Writer
Webdunia