ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்!
ரஷ்யாவில் பைகல் ஏரி உள்ளடங்கிய சைபீரியன் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 10.35 மணியளவில் (க்ரீன்விச் நேரம் 1.35) ஏற்பட்டதாகவும், இர்குட்ஸ்க் நகரத்தின் மேற்கே பைகல் ஏரியின் தென்கோடி முனையில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது இர்குட்ஸ்க் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதாகவும் இதனால் அச்சமுற்ற ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்ததாகவும் ரஷ்ய தொலைக்காட்சி சேனல் என்.டி.வி. தகவல் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.