1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாக்தாத்தில் குண்டு வெடித்து 18 பேர் பலி

பாக்தாத் குண்டு வெடி‌ப்பு
பாக்தாத் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 18 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

பாக்தாத் நகரில் நேற்று மாலை தற்கொலை படை தாக்குதல் நட‌த்த‌ப்ப‌ட்டது. அங்குள்ள உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டைக் குறி வைத்து நட‌த்த‌ப்ப‌ட்ட இ‌ந்த தா‌க்குத‌லி‌ல், வெடிபொருட்கள் நிறைந்த லாரி ஒன்று ‌வீ‌ட்டி‌ன் அருகே வெடிக்கச் செய்யப்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயெ 15 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் அந்த உயர் காவலதிகாரி உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர். ஆனால் அவரது நெருங்கிய உறவினர் பலியானார். அவரது வீடு இடிந்து தரைமட்டமானது.

ஈராக்கில் காவல்துறை மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
About Writer
Webdunia