ஆஃப்கன் தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் பலி!
வடக்கு ஆஃப்கானிஸ்தானில் சர்வதேசப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் படுகாயமடைந்தனர்.
கந்தஹார் நகரத்தின் அருகில் நடந்த இந்தத் தாக்குதலில் சர்வதேசப் படையினர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறை தலைவர் சையத் அகா ஷகிப் தெரிவித்தார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர் காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்து வெடிக்கச் செய்ததாகவும், காயமடைந்தவர்களில் 2 காவலர்கள் உள்பட 7 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேசப் படைகளின் அணிவகுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபரைக் கடந்து சென்ற பின்பு, குண்டுகள் வெடித்துள்ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.