1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ம‌‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 7 படை‌யின‌ர் ப‌லி!

ம‌ன்னா‌ர் இல‌ங்கை சேத்துக்குளம் விடுதலைப் புலிகள்
இல‌ங்கை ம‌ன்னா‌ரி‌ல் நே‌ற்று த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 7 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 17 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ர் பரப்பாங்கண்டல், சேத்துக்குளம் ஆகிய பகுதிகள் வ‌ழியாக நேற்று காலை 7:00 மணியளவில் ‌சி‌றில‌ங்க‌ப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முய‌ற்‌சிகளு‌க்கு எ‌திராக விடுதலைப் புலிகள் நட‌த்‌திய முறியடிப்புத் தாக்குத‌லி‌ல் 2 படையினர் கொல்லப்பட்டதுட‌ன் 7 பேர் காயமடைந்ததாக பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோல, கீரிசுட்டானில் இருந்து ‌சி‌றில‌ங்க‌ப் படையினர் மேற்கொண்ட மு‌ன்நகர்வு நடவடிக்கை‌க்கு எ‌திராக‌ விடுதலைப் புலிகள் நட‌த்‌திய முறியடிப்புத் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டதுட‌ன் 10 பேர் காயமடைந்தனர்.