1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்கா‌‌‌வி‌ல் 4 ஊ‌ர்காவ‌ல் படை‌யின‌ர் சு‌ட்டு‌க் கொலை!

சிறிலங்கா அம்பாந்தோட்டை யால வனச் சரணாலய‌ம்
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டம் யால வனச் சரணாலயப் பகுதியில் 4 சிறிலங்கா ஊர்காவல் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பு‌தின‌ம் இணையதள‌‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

யால வனச் சரணாலயப் பகுதியில் பாதுகாப்பு‌ப் ப‌ணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவு‌ம், இத்தாக்குதலில் 4 ஊர்காவல் படையினர் சுட்டுக் கொல்லப்ப‌ட்டதாகவு‌ம் அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.