1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் இல்லை

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் இல்லை
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் முகமது அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது நிலவிவரும் சட்டம் ஒழுங்கு நிலையை முறைப்படுத்துவதற்காக அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்ய அதிபர் முஷாரஃப் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்றும், இதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது என்றும் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - க்யூ பிரிவின் சுஜாத் ஹூசேன் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் முகமது அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.
About Writer
Webdunia