1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு

பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர் கரும்பு
பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக குந்தார்கி என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலை முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் மாவட்ட கரும்பு மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ராஜ்பகதூர் வர்மா. இந்த சர்க்கரை ஆலை முறைகேடு செய்ததாக மோதிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் இந்த சர்க்கரை ஆலை அத்தியாவசிய நுகர்பொருட்கள் சட்டத்தை மீறியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
About Writer
Webdunia