இந்தியாவின் ஆறு மொழிகளில் புதிய தொலைகாட்சி சானல்களை தொடங்க 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக ரூபர்ட் முர்டாக் தெரிவித்தார். உலக அளவில் ஊடக ஜாம்பவானகக் கருதப்படும் நியூஸ் கார்ப்பரேஷன் சேர்மன் ரூபர்ட் முர்டாக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஸ்டார் தொலைகாட்சி உட்பட பல்வேறு நாடுகளில் செய்திப் பத்திரிக்கைகள், தொலைகாட்சி சானல்களை ஆகியவற்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நியூஸ் கார்ப்பரேஷன் நடத்தி வருகிறது. நியுஸ் கார்ப்பரேஷனைச் சேர்ந்த டோவ்...