வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் பண பரிமாற்ற வரி நீக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் குறுக்கிட்டு பேசும் போது சிதம்பரம், கறுப்பு பணத்தை தடுக்க அரசு மாற்று வழிகளை கடைப்பிடிக்கும். இந்த வருட இறுதியில் வங்கிகளில் வசூலிக்கப்படும் பண பரிமாற்ற வரி ரத்து செய்யப்படும். கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் பணபரிமாற்ற வரி விதிக்கப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்த உள்ள...