மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு- சென்செக்ஸ் முற்பகல் 11.30 மணியளவில் 411 புள்ளிகள் சரிந்து 8,959 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு- நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 2722 ஆக காணப்பட்டது.