1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபாய் மதிப்பு 13 பைசா உயர்வு

டாலர்
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.34-48.35 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 13 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.47 பைசா.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் ஏற்றம் காணப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலர் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
About Writer
Webdunia