1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

மும்பை தங்கம் வெள்ளி லண்டன்
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.275 அதிகரித்தது.

இந்திய சந்தை போலவே, லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 864.00/864.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 843.00/843.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.37/11.38 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 11.12/11.13)

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,270
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,205
பார் வெள்ளி கிலோ ரூ.18,090.
About Writer
Akshesh Savaliya