பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் விஜயதாரணி!..
பல வருடங்களாக காங்கிரஸில் பயணித்தவர் விஜயதாரணி. தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸுக்கு ஆதராகவும், பாஜகவுக்கும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீதும் அதிருப்தி கொண்டார்.
2024ம் ஆண்டு விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இனைந்தார். ஆனால், 2 வருடங்களாக பாஜகவில் பயணித்தும் அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், பாஜக தலைமையின் மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில், தற்போது பாஜகவிலிருந்து தவெகவில் இணைய முடிவெடுத்திருக்கிறார். விரைவில் அவர் தவெக தலைமை அலுவகத்திற்கு சென்று தவெகவில் இணையவுள்ளார்.