1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்செக்ஸ் 145 -நிஃப்டி 61 புள்ளி உயர்வு

நிஃப்டி சென்செக்ஸ்
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதிருந்தே, ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் இரண்டரை மணிக்கு மேல் அதிகரிக்க துவங்கின.

இன்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 144.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,976.98 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,041.75 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் 79.14, பி.எஸ்.இ 500- 68.56, சுமால் கேப் 117.56 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1866 பங்குகளின் விலை அதிகரித்தது. 648 பங்குகளின் விலை குறைந்தது. 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
About Writer
Akshesh Savaliya