1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம் விலை ரூ.200 குறைந்தது!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று குறைவான தேவை இருந்ததால், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.200ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.140ம் குறைந்துள்ளது.

ஆசிய சந்தையில் வெள்ளிக்கிழமை அவுன்ஸ் 916.60/917.40 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 917.90/918.70 டாலராக அதிகரித்துள்ளது.

அதேபோல், அவுன்ஸ் 17.07 அமெரிக்க டாலராக இருந்த வெள்ளியின் விலை இன்று 17.11/17.16 டாலராக அதிகரித்துள்ளது. டாலரின் மதிப்பு குறைவே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று டோக்கியோ சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,970
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,910
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,535