1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை சரிவு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.185-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.120-ம் குறைந்தது.

சிங்கப்பூர் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் விற்பனை செய்ய தொடங்கியதால், இதன் விலைகள் குறைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இன்று 1 அவுன்ஸ் தங்கம் 895.75/896.75 டாலராக இருந்தது. நேற்றைய விலை 899.50/900.20 டாலர். கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவிற்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 914 டாலராக அதிகரித்தது நினைவிருக்கலாம்.

வெள்ளியின் விலையும் குறைந்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.04/16.09 டாலராக இருந்தது. நேற்றைய விலை 16.10/16.15 டாலர்கள்.


இன்றைய காலை விலை நிலவரம் ;

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,390
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,340
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,600.