1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.185-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80-ம் அதிகரித்தது.

இன்று தொழில் துறையினர் வெள்ளியை அதிக அளவில் வாங்கினார்கள். இதனால் வெள்ளியின் விலை அதிகரித்தது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க், லண்டன் சந்தைகளிலும் வெள்ளி விலை அதிகரித்தது. இன்று 1 அவுன்ஸ் 14.73/14.75 டாலராக விற்பனையானது,. (நேற்றைய இறுதி விலை 14.38/14.40). தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 805.25/807.50 டாலராக அதிகரித்தது.
(நேற்றைய இறுதி விலை 796.25/798.50).

இன்று இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,340 (நேற்று ரூ.10,265)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,295 (ரூ.10,215)
பார் வெள்ளி கிலோ ரூ.19,235 (ரூ.19,050)
About Writer
Webdunia