1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு குறைந்தது!

டாலர் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தை
அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு குறைந்தது.

இன்று காலையில் 1 டாலர் ரூ 39.72/74 என தொடங்கியது. 1 டாலர் ரூ. 39.67 பைசா முதல் ரூ.39.85 பைசா வரை வர்த்தகம் நடைபெற்றது. இறுதியில் 1 டாலர் ரூ. 39.73/74 ஆக முடிவுற்றது. இது நேற்றைய விலையை விட 4 பைசா குறைவு.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 11 விழுக்காடு குறைந்துள்ளது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் விலை ரூ. 39.79 என அறிவித்தது. இது நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்த விலையை விட 32 பைசா குறைவு.

நேற்று 1 டாலர் ரூ. 39.47 என ரிசர்வ் வங்கி அறிவித்தது.