1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 86.4 அடியாக அதிகரித்தது.

அணைக்கு விநாடிக்கு 26,622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 13,011 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,768 கன அடி, வென்னாற்றில் 7,024 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,126 கனஅடி நீரும் பிரித்து அனுப்பப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
About Writer
Webdunia