விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை குவின்டாலுக்கு ரூ.1,250 ஆக உயர்த்தும்படி விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. திருச்சியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறுவை பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,250 வழங்க வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட காவிரி பாசன பகுதி விவசாயிகள்...