பாகிஸ்தான் மிளகாயில் நச்சு தன்மை இருப்பதால், அந்த நாட்டில் இருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இந்த தடையால் இந்தியாவிற்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்து பிரதேசத்தில் உள்ள விவசாய விளைபொருட்கள் வர்த்த மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகாயில் அப்லாட்டாக்ஸின் என்ற வேதிப் பொருள் இருப்பதாக கூறி, ஐரோப்பிய ஒன்றியம்...