யேமன் நாட்டில் மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு வேலை
யேமன் நாட்டில் மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் பு.ரா. பிந்துமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யேமன் நாட்டில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்துக்கு, மெக்கானிக்கல் பொறியாளர் பட்டப் படிப்புடன் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற எச்விஏசி பொறியாளர்கள், குளிர் சாதனம் மற்றும் ஏர்கண்டிஷனிங் பிரிவில் டிப்ளமோ படித்து 6 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற எச்விஏசி சைட் பொறியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர்.
எனவே, இப்பிரிவில் உரிய தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் அதன் நகல்களுடன் வெள்ளைப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நேர்முகத் தேர்வு ஜூன் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.
தகவல்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் முதல் தளம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை.
மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. எண்கள்: 24464268, 24464269