1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

தீயணைப்பு வீரர்கள் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 339 ஆண் தீயணைப்பாளர்கள் தேர்வுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் ‌விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் கா‌லியாக உ‌ள்ள 339 தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கட‌ந்த அக்டோபர் 5ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெ‌ற்றது.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ் சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெ‌ற்றது.

இ‌ந்த எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலும் மேலும் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்வில் தேர்வு பெறாத விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எ‌ன்று தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.