ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (12:56 IST)

அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் ஆலிவ் ஆயில் !!

ஆலிவ் ஆயில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இந்த எண்ணெய் நம்முடைய உடல்நலத்திற்கும், சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். 

இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை காக்க மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.
 
ஆலிவ் எண்ணெய்யில் சமைப்பதற்கு மற்றும் இன்ன பிற பயன்பாடுகளுக்கென்று ஆலிவ் எண்ணெய் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
 
வைட்டமின் கே ஆலிவ் எண்ணெய்யில் சிறிதளவு உள்ளது. இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். இது எலும்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
தினமும் காலையில் தூங்கியெழுந்ததும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அருந்த வேண்டும் மற்றும் இரவில் உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அருந்த வேண்டும். இந்த முறையை மலச்சிக்கல் தீரும் வரை பயன்படுத்த வேண்டும்.
 
ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைக்கப்பட்ட பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதால் இந்த ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்க முடியும்.
 
உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆசுவாசபடுத்தி நமது மன அழுத்தங்கள் முற்றிலும் நீங்குகிறது.