1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (12:10 IST)

இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு வலுவை கொடுக்கும் கருப்பட்டி !!

பருவம் அடைந்த பெண்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கும் அந்த காலத்தில் கருப்பட்டியை அதிக அளவுக்கு கொடுப்பது வழக்கம், ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் காணப்படுகிறது.

கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு வலுவை கொடுக்கிறது. இதனால் உடலுக்கு புதிய பொலிவை கொடுத்து மேனியை பளபளக்க வைக்கிறது.
 
கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்து காணப்படுவதால் உடலில் இரத்தத்தை சுத்திகரித்து உடம்பினை வலுவடைய செய்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவு காணப்படுவதால் இது நீரழிவு நோயை கட்படுத்துகிறது.
 
பெண்களுக்கு அதிக அளவுக்கு நன்மையை தரக்கூடிய மகத்துவமான ஒரு பொருளாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அற்புத மருந்தாக செயல்பட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.
 
கைக்குத்தல் அரிசியுடன் அவர்கள் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டு வர அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை சரிசெய்து உடம்பில் இன்சுலினை சுரக்கச்செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
 
குழந்தைகளுக்கு பாலுடன் சர்க்கரையை சேர்க்காமல் கருப்பட்டியை சேர்த்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது.
 
பருவம் அடைந்த பெண்களுக்கும், பாலுட்டும் தாய்மார்களுக்கும் கருப்பட்டி உளுந்து சேர்த்து களி செய்து கொடுப்பதனால் இடுப்பு எலும்பு வலுபெறும். சாப்பிட்ட பின்பு உணவு செரிமானத்துக்கு கருப்பட்டி நல்ல பயனை அளிக்கிறது.