கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும் செம்பருத்திப்பூ !!
செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது. இதன் அதிக மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கும், இளநரை போன்ற பிரச்சினைகளுக்கும் செம்பருத்தி பூ முக்கிய பங்கு ஆற்றுகிறது. சிலருக்கு உடல் சூடு காரணமாக தான் தலை முடி உதிர்வு, பொடுகு பிரச்சினை ஏற்படுகிறது.
தலைமுடி உதிர்வை தவிர்ப்பதற்கு செம்பருத்தி இதழ்களை ஒருகைப்பிடி அளவு எடுத்து அதனை நன்கு காயவைத்து பின்பு சுத்தமான தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி அதனை முடி உதிர்வு உள்ள இடத்தில் தேய்த்து வர புதிய முடிகள் வளரும். மேலும் இளம்நரை தவிர்த்து முடி கருகருவென்று வளரும்.
செம்பருத்தி எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மயிர்கால்களை தூண்டி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை, இளநரை போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்து கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உதவுகிறது.
வாரத்திற்கு ஒருமுறை செம்பருத்தி பூ இலைகளை அரைத்து பின்பு தலையில் தேய்த்து குளிப்பதனால் உடல் சூடு குறையும் தலைமுடிக்கு நல்ல மனத்தையும் கொடுக்கிறது.