Daily Horoscope
✕

சுவையான மெது பக்கோடா செய்ய...!!

Written By Sasikala
Updated: புதன், 25 மார்ச் 2020 (12:33 IST)
அரிசி மாவு - 50 கிராம் 
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி 
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
பூண்டு பல் - 6
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம் 
 
       
செய்முறை:
 
வெங்காயத்தை கழுவி நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும். 
                     
பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும். பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை  மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து  பிசையவும்.
 
தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்  ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு  சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுக்கவும். சுவையான மெது பக்கோடா தயார்.

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments