புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

குழந்தைகளின் வறட்டு இருமலை போக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள்...!!

வெங்காய சாறில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக பாகு பதத்திற்கு காய்ச்சி தினமும் குழந்தைக்கு 3 வேளை கொடுத்து வந்தால் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
மாதுளை சாறில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி ஆகியவற்றை கலந்து கொடுப்பதால், குழந்தையின் வறட்டு இருமல்  குணமாகும்.
 
புதினா சூப் அல்லது புதினா சாதம், புதினா துவையல் என்று கொடுத்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
 
உலர்திராட்சையை வாங்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கொடுத்து வந்தால், குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
 
சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது வைட்டமின் C சத்து அதிகளவு தேவைப்படும். அப்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து, மிதமான  சூட்டில் கலந்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
 
திப்பிலி பொடியில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.
 
கொள்ளுப்பயிரை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்பு மிளகு, சுக்கு மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை என்று ஒரு வாரம் வரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.