1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் மாதுளை சாப்பிடுவதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்துமா...?

மாதுளை சருமத்தின் அழகை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோயை குணப்படுத்த உதவுகிறது. மாதுளை சாறு குடிப்பது உடலின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. 

மாதுளை மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது, இதில் பல சத்தான கூறுகள் உள்ளன. இதில் நீர், ஆற்றல், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்சத்து, சர்க்கரை ஆகியவை  உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி 6, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது. 
 
மாதுளையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இவை பல வகையான தோல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. கொலாஜனை அதிகரிப்பதன் மூலம் மாதுளை தோலில் உண்டான முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்கிறது. இது தவிர, பருக்கள் மற்றும் வடுக்கள், கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. 
 
மாதுளை தினமும் உட்கொள்வதன் மூலம் சருமத்திற்கு நன்மை பயக்கிறது.  வறண்ட சருமம்  மற்றும்  எண்ணெய் சருமம், என  இரண்டு வகையான சருமத்திற்கும் மாதுளை  நன்மை பயக்கிறது.
 
மாதுளையில் அதிக அளவில் இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. கீல்வாதம் உள்ளவர்கள் மாதுளையை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் மாதுளை சாப்பிடுவதன் மூலம்  எலும்புகளை வலுப்படுத்து இயலும்.
 
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்த விதமான மெழுகும் இல்லாத பழங்களை உட்கொள்ள வேண்டும். மாதுளைப் பழத்தின் சாறு கர்ப்பிணிப் பெண்ணுகளுக்கு நன்மை பயக்கிறது.
 
மாதுளை முடியை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது. மாதுளை கூந்தலின் நன்மைக்காக  வைட்டமின்கள் மற்றும் சத்தான பொருட்களை வழங்குகிறது. மாதுளை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது கூந்தலுக்கு நன்மை அளிக்கிறது. 
 
தயிரில் மாதுளை சாறு கலந்து ஹேர் மாஸ்கைத்  தயார் செய்து தலைமுடியில் தடவவும். இது முடியின் வேரை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தலைக் குறைகிறது.