புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தேங்காயை எடுத்துக்கொள்வது சர்க்கரை மற்றும் கொழுப்பை அதிகரிக்க செய்யுமா...?

தேங்காயில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளும், உடலைப் பாதுகாக்கும் விஷயங்களும் அடங்கியுள்ளன.

தேங்காய் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என்று சிலரும், நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்று சிலர் சாப்பிட தயங்குகின்ரனர். அதிலும், நீரிழிவு நோயாளிகள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிய குழப்பம் நீரிழிவு நோயாளிகள் பலருக்கும் உள்ளது.
 
தேங்காயில் கார்போ ஹைட்ரேட், புரதச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. இந்த சத்துகள் அனைத்தும் தான் ஒருவரின் உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் முக்கியமான சத்துகள் ஆகும். அதுமட்டுமின்றி, சர்க்கரை, கொழுப்பு போன்ற சத்துகளும் இதில் உள்ளன. 
 
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.
 
தேங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதுபோன்ற நார்ச்சத்துகள் தான் இரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன. அதேபோல், தேங்காயில் நுண்ணுயிர் சத்துகளான காப்பர், மெக்னீசியம், இரும்புச் சத்து, செலினியம், ஜிங்க் போன்றவை உள்ளன.
 
இயற்கையாக கிடைக்கக் கூடிய எந்த ஒரு பொருளும் உடலுக்கு நன்மை மட்டுமே கொடுக்கும். ஆனால், அந்த இயற்கை பொருட்களை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்கும். 
 
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளைத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.