திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் திரிபலா சூரணம் !!

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இந்த மூன்று காய்களும் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவை. ஒரு சிலர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி, மலச்சிக்கல் இது போன்ற பல நோய்கள் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு மருந்து.

பல நோய்களுக்கான ஒரு மருந்து இந்த திரிபலா. திரிபலாவை சித்தர்கள் காயகல்ப மூலிகை என்று கூறுகின்றனர்.
 
நம் உடலில் இருக்கக்கூடிய இருதயம், கணையம், சிறுநீரகங்கள் என, ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு விதமான திசுக்களால் ஆனது. இப்படி உடலில் இருக்கக்கூடிய ஏழு வகையான திசுக்களையும் எந்த ஒரு உணவு ஊட்டமளித்து பலப்படுத்தி நீண்ட நாள் பாதுகாக்கிறதோ அதைத்தான் சித்தர்கள் காயகல்ப மூலிகை என்று கூறுகின்றனர்.
 
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரிபலாவை தினமும் நாம் சாப்பிட்டு வரும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
 
மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து திரிபுலா. சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவ முறைகள் மலச்சிக்கலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடிய ஒரு சிறந்த மருந்து இந்த திரிபலா.
 
மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இரவு உணவுக்கு பிறகு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து குடித்து வர இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த கழிவுகளையும் வெளியேற்றி மலச்சிக்கலை வந்து குணமாக்கும்.