1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்தயத்தில் உள்ள மருத்துவ குணங்களும் அற்புத பலன்களும் !!

வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையினை கட்டுக்குள் கொண்டுவரும். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்கிறது.

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் தலைமுடி உச்சந்தலை வெளிப்புற சீ தோஷங்களிலிருந்து காக்கிறது ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்ந்து ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.
 
புதியதாக குழந்தை பெற்ற  தாய்மார்கள்  சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினைகள் உள்ளன.  இதற்கு அந்த பெண்கள் தினமும் வெந்தயத்தை இரண்டு வேளை உணவில் உட்கொண்டுவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்க வல்லது.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிரத் தன்மையும் குறையும். வலி நிறைந்த மாதவிடாய் காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரையும் அருந்தி வர அந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.