1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (18:04 IST)

உடல் எடை குறைக்க உதவுகிறதா கொண்டைக்கடலை...?

Chickpeas
உடல் எடையினை குறைக்க நார்சத்து மிக முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். கொண்டைக்கடலையை தினமும் ஒரு கைப்பிடி உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்கும்.


கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொண்டைக்கடலை உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொண்டைக்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. மேலும் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. தினமும் இரவில் படுக்கும் போது ப்ரௌன் நிற கொண்டக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

மேலும் படிக்க:
தினமும் கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்குமா...?

கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

Edited by Sasikala