1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Does eating chickpeas every day help control blood pressure?

தினமும் கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்குமா...?

கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். 

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.
 
முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடி ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் முடி கொட்டுதலை தடுக்கும்.
 
கொண்டைக்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் செல் அழிவு ஏற்படாமல் தடுக்கும். எனவே தினமும் கொண்டைக்கடலையினை உண்டு வரவும்.
 
கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொண்டைக்கடலை உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
 
உடல் எடையினை குறைக்க நார்சத்து மிக முக்கியம். நார்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்போது உங்களின் உடல் எடை மிக வேகமாக குறையும். கொண்டைக்கடலையில் நார்சத்து உள்ளதால் அதனை நீங்கள் உண்ணும்போது உங்கள் உடல் எடை வேகமாக குறையும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
தினமும் வாழை இலையில் உணவு உண்பதால் என்ன நன்மைகள்...?