வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (12:53 IST)

ஐப்பசி மாத கார்த்திகை விரத பலன்கள்...!!

Lord Murugan
முருகனுக்கு மூன்று விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வார விரதம்: செவ்வாய்க்கிழமை விரதம். நட்சத்திர விரதம்: கார்த்திகை விரதம். திதி விரதம்: சஷ்டி விரதம் ஆகும். இதில் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.


ஐப்பசி மாதம் கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் அருளைப் பெறலாம்.

முருகன் அருளால் சகல செல்வங்களும் பெறுவார்கள். விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

கார்த்திகை மாதத்தில் விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும், பெண்களுக்கு நல்ல கணவனும், ஆண்களுக்கு நல்ல மனைவியும் அமையும் மற்றும் குழந்தை பாக்கியம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த விரதம் பலன் தருகின்றது.

கார்த்திகை விரதத்தை ஆடி மாதத்தில் தொடங்கி தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை விரதத்தினை மேற்கொண்டு முருகனின் அருளால் வாழ்வின் எல்லா நலன்களையும் பெறுவோம்.

Edited by Sasikala