திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கிய பலன்களை அள்ளித்தரும் வெள்ளரிக்காய்...!!

வெள்ளரியில் உள்ள கூறுகள் ஆரோக்கியமான இதயத்தைத் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில பொட்டாசியமும் மாங்கனீசும் உள்ளதால் இவை நம் உடலின் நரம்பியல் செயல்பாட்டை மேமபடுத்த உதவுகின்றன.

வெள்ளிரி முக்கியமாக, நோய் எதிர்ப்பை அதிகரித்து இதய நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.
 
வெப்பம் நிறைந்த கோடைக்காலம் மிக வேகமாக நம் உடல் நீரை வற்றச்செய்து அடிக்கடி தண்ணீர் தாகம் வாட்டும். இதற்கு புதிய வெள்ளரியை நறுக்கி சில  துண்டுகளை மென்று கொண்டிருந்தால், போதும். இது நம்மை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, எடை குறைப்பதற்கான உணவாகவும் இருக்கிறது.
 
வெள்ளரி உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், இது நம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால், எடையைக்  குறைக்க உதவுகிறது. 
 
வெள்ளரியில் 95% நீர்ச்சத்து இருப்பதால் அது நம் கண்களை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் மேலும் இதில் உள்ள வைட்டமின் இ, தோலை சுருங்காமல்  இருக்கச்செய்யும்.
 
வெள்ளிரியில் உள்ள ‘எரப்சின்’ என்ற முக்கிய என்சைம் ஜீரண செயல்பாட்டை மேம்படுத்தி, புரதங்களை நம் உடல் வேகமாக உறிஞ்ச உதவுகிறது.
 
வறண்ட கூந்தலுக்கு வெள்ளரியை அரைத்து நீர் கலந்து அதை உச்சந் தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். இது உங்கள் தலையை வலுவூட்டி ஆரோக்கியமாக வைத்திருக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுத்து வேகமாக முடி வளர உதவும்.