திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியம் மற்றும் அழகை மேம்படுத்த உதவும் முருங்கை எண்ணெய்...!!

முருங்கையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைவது தெரியவந்துள்ளது.

முருங்கை அதிக புரோட்டீன்கள் இருப்பதால், தசை வளர்ச்சி பெற இது மிகச்சிறந்த உணவாகும்; மேலும் உடலின் தசை நிறையைப் பராமரிக்கவும் இது உதவுகிறது.
 
இயற்கையிலேயே பளபளப்பான சருமம் பெறுவதற்கு வீக்கம், ஆக்சிடண்ட், வயதாகுதலுக்கெதிரான குணங்களைக் கொண்டுள்ள முருங்கை எண்ணெய் சிறப்பான  தேர்வாகும். மிருதுவான, பளபளப்பான சருமம் பெற மிகவும் அவசியமான “ரத்தத்தை சுத்தப்படுத்தும்” பணியை இது செய்கிறது.
 
முருங்கை எண்ணெய் பயன்படுத்தினால் மிருதுவான பளபளப்பான தலைமுடியைப் பெறலாம். தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் எண்ணெய்யுடன் சிலதுளிகள்  முருங்கை எண்ணெயைக் கலந்து தலை உச்சியில் தடவி வந்தால் தலை நுண்ணறைகள் ஆரோக்கியமடையும். 
 
தலைமுடியின் அடிப்பகுதியில் இதைத் தடவினால் முடி கொட்டுவதும் தடுக்கப்படும். காய்ந்த தலை உச்சி, தலைமுடி உள்ளவர்களுக்கு இது பலன் தரும். ஏனெனில் இது முடியின் மிருதுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
 
அதீத சத்துக்கள் உள்ள முருங்கை உடலில் பல்வேறு விதமான நோயெதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு கட்டமைப்பு சீராக வேலை செய்ய உதவும் வைட்டமின் A இரும்பு ஆகியவை இதிலிருப்பதால் இதன் நோயெதிர்ப்பு சக்தி அபாரமானது.