திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் நாவல் பழம்...!!

நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனோடு ஒரு ஏலக்காய், சிறிதளவு லவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை, மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியன குணமாகும்.

* நாவல் பட்டை சூரணத்தை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி, குழம்பு பதத்தில் வரும்போது எடுத்து ஆற வைத்து மேல் பூச்சாக, பற்றாகப் போட்டு வருவதால் வாத நோய் தணியும், வலியும் குறையும்.
 
* நாவல் பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு போகும். ரத்தசோகை குணமாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 
* அடிக்கடி நாவல் பழத்தை உண்ணுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும். சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும்.
 
* நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.
 
* நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய்க் கொப்புளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியன குணமாகும். இதே நீரைக் கொண்டு புண்களைக் கழுவுவதால் விரைவில் புண்கள் ஆறும்.