வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முதுகுவலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!

முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் ஸியாடிகா ஏற்படும். 

இதர முதுகெலும்பு  கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.
 
ஆஸ்டியோ - ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.
 
சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி  இவைகளையும் காரணமாக சொல்லலாம்.
 
விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும். பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
 
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
 
விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி - இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
 
வெண்நொச்சி மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி  வீதம், எடுத்துக் கொள்ளவும்.