வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!!

நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி  அடர்த்தியாகவும் இருக்கும்.
நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
 
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
எண்ணெய் குளியல் என்று சொல்லும்போது, தலைக்கு மட்டுமன்றி உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
பொடுகு தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
 
கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி அதன் ஆரோக்கியம் கெடும். எனவே வாரம்  ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
 
முடி உதிர்தல் அதிகம் இருந்தால் நல்லெண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை மேற்கொண்டு வாருங்கள். இதனால் முடி நன்கு ஊட்டம்  பெற்று வலிமை பெறும்.
 
தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து  விடுபட்டு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.