புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செம்பருத்தி டீ பருகுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன...?

செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
தற்போது பால் இல்லாத டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி  டீ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
 
செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும்  வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
 
உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் அது நல்ல கொலஸ்ட்ராலாக இருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் போது நிச்சயமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும். செம்பருத்தி டீயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் ,  உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது.
 
காய்ச்சல் என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் உடல் உபாதையாகும். இந்த கிருமி எளிதில் உடலைத் தாக்கி, உடலை வலுவிழக்கச்  செய்யும். செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி  உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.
 
பெண்களின் மாதவிடாய் காலங்களில் செம்பருத்தி டீ அவர்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க  உதவுகின்றன.
 
கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.